
டப்பா தொழிற்சாலைக்கு வரவேற்கிறோம்
டப்பா தொழிற்சாலை தமிழகத்தின் 40 ஆண்டு கால பாரம்பரிய மிக்க அச்சு மற்றும் அட்டை பெட்டி தயாரிக்கும் ஆலை ஆகும். அந்த காலங்களில் பொருட்களை விற்பனை செய்ய துணிபைகளே பிரதான இடத்தை பிடித்து இருந்தன, நாளடைவில் வாணிப அதிகரிப்பு, மேலைநாட்டு கலாச்சார ஆக்கிரமிப்பு காரணமாக இந்திய சந்தைகள் கண்கவர் பெட்டிகளை நோக்கி படை எடுக்க துவங்கினர்.
குறிப்பாக 1980 களில் இந்திய சந்தைகளின் Packaging தேவை உச்ச கட்டத்தில் இருந்தது. அந்த காலத்தில் தான் திருநெல்வேலியை மையமாக கொண்டு செயல் பட்ட பெல் குழுமம், இந்தியாவின் Packaging தேவையில் 3 இல் 1 பங்கை சந்திக்க கூடிய இப்போதைய பெல் பிரிண்டர்ஸ் நிறுவனத்தை துவங்கியது .
அதன் தொடர்ச்சியாக தான் தமிழகத்தின் பெட்டி தேவையை சந்திப்பதற்காகவும், நடுத்தர நிறுவங்களின் வாணிபத்தை மேம்படுத்தவும் டப்பா என்ற ஒரு பிரத்தியேக அடையாளத்தை உண்டாக்கினர்.


எங்களை பற்றி
டப்பா.இன் குறிக்கோள் என்பது வெறும் பெட்டி தயாரிப்பில் மட்டும் ஈடுபடுவது அல்ல, அதற்கும் ஒரு படி மேல சென்று மிக எளிமையான செய்முறை, விலை குறைந்த, தரம் சார்ந்த பெட்டிகளை தயாரிப்பதுமே ஆகும். எங்களுடைய நிறுவனமானது packaging தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த இளம் படையை கொண்டுள்ளது, இதனால் எங்களால் எப்படி பட்ட packaging தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.
